அக்ஷ்சய திருதியை: அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை

அக்ஷ்சய திருதியை முன்னிட்டு அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை முகாம் வரும் 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அக்ஷ்சய திருதியை முன்னிட்டு அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை முகாம் வரும் 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்படும் இந்த தங்கப்பத்திர விற்பனைத் திட்டத்துக்காக, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் 1 கிராம் தங்கத்தின் விற்பனை விலை ரூ. 2901-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆண்டுக்கு 500 கிராம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 8 ஆண்டுகளில் முதிர்வு தொகையைப் பெறலாம்.
தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்பங்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் என இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com