முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நாளை தொடக்கம்

திருச்சியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் டிச.2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் டிச.2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழு விளையாட்டு, தடகளப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடைபெறும். டிச.2இல் கூடைப்பந்து, கையுந்துப்பந்து, வளைகோல்பந்து, கால்பந்து, கபாடி, டென்னிஸ் போட்டிகளும்,  டிச.3இல் இறகுப்பந்து போட்டியும், டிச.4இல் தடகளம், நீச்சல், டேபிள் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஆண்களுக்கான தடகள போட்டியில் 100மீ, 800மீ, 5000மீ, 110மீ தடைதாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தத்தி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கான தடகள போட்டியில் 100மீ, 400மீ, 3000மீ, 100மீ தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல். நீளம் தாண்டுதல், மும்முறை தத்தி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
நீச்சல் போட்டியில் இருபாலருக்கும் 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்டோக், 50மீ ப்ரஸ்ட் ஸ்டோக், 50மீ பட்டர் பிளை பிரிவுகளில் நடைபெறும். டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் இரண்டு ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் பிரிவில் நடைபெறவுள்ளது.
இப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு 31.12.2017 அன்று 21 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவோர் மாநிலப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். பங்கேற்க விரும்பும் நபர்கள் போட்டிகள் நடைபெறும் தேதியில் காலை 8.30 மணிக்கு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.75 ஆயிரமு மற்றும் மூன்றாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com