இந்து முன்னணி  ஆர்ப்பாட்டம்: 26 பேர் கைது

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 26 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 26 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம்  அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.  ஆறுமுகம் தலைமை வகித்தார்.  மாநகரச் செயலர்கள்
பாலமுருகன், ஜீவானந்தம், போஜராஜன் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பொதுச் செயலர்  நா. முருகானந்தம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் தங்க. ராஜய்யன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.    ஆர்ப்பாட்டத்தில்  கோட்ட, வார்டு பொறுப்பாளர்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநகர் மாவட்டச் செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாநகரச் செயலர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 26 பேரை கைது செய்த போலீஸார் மாலையில் அவர்களை
விடுவித்தனர்.
மணப்பாறையில்.... திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார்.  சுப்பிரமணியம்,
மாரிமுத்து, மருதை, சரவணன் வேல்முருகன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல மணப்பாறை பகுதியில் மாவட்ட அமைப்பாளர்
குழந்தைவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூரில்...:  மண்ணச்சநல்லூர் அரிசி மார்க்கெட் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,   மண்ணச்சநல்லூர் ஒன்றிய
பொறுப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com