உப்பிலியபுரத்தில் விவசாய சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நூறு நாள் திட்டப் பணியாளர்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நூறு நாள் திட்டப் பணியாளர்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்க வேண்டும், ம், மாநில அரசு சட்டக் கூலி ரூ. 205- ஐ  குறைக்காமல் வழங்கவும், முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட வேலையை
உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்போராட்டத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான  ஏ.
லாசர் தொடக்கி வைத்து பேசினார்
சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஏ. கணேசன் தலைமை வகித்தார்.  உப்பிலியபுரம் ஒன்றித்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டநூறு நாள் வேலை திட்ட'பணியாளர்கள்
முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.  உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தை அடைந்து போராட்டத்தை தொடக்கினர். 
முசிறி டி.எஸ்.பி. கோ.  பாலமுருகன், துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார், உப்பிலியபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ராஜா உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகளுடன் அமைதி
பேச்சு நடத்தினர்.
 உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 18 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டப் பணிகள் தொடர்பாக 15 நாள்களுக்குள் திட்டஅறிக்கை தயாரித்து மாவட்டநிர்வாகத்துக்கு அனுப்பி ஆட்சியரின் ஒப்புதல்
பெற்று ஒன்றியத்துக்குள்பட்டஅனைத்து ஊராட்சிகளிலும் உள்ள திட்ட  பணியாளர்கள் அனைவருக்கும்  வேலை வழங்கப்படும் என்ற உறுதியை ஒன்றிய அலுவலர்கள் அளித்ததைத் தொடர்ந்து இரண்டு
மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com