தத்தெடுக்கப்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியில் ரூ.4 கோடியில் திட்டப் பணிகள்

மத்திய அரசின் கிராம தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் ஒன்றியம், பழங்கனாங்குடி ஊராட்சி தத்தெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.4 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் கிராம தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் ஒன்றியம், பழங்கனாங்குடி ஊராட்சி தத்தெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.4 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது.
திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் தத்தெடுத்துள்ள இந்த ஊராட்சியில் புதன்கிழமை சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது.  முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இத்திட்டம் உள்கட்டமைப்புகளை
உருவாக்குவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிராம வளர்ச்சியை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். பல்வேறு துறைகளின் சார்பில்
முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்கக் கூடிய அலுவலராகவும் செயல்படுவார். இந்த ஆண்டு (2017) திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பழங்கனாங்குடி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கருத்துகளைகேட்டு முதல்கட்டமாக ரூ. 4 கோடி மதிப்பில் 65 பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 
இதில்,  முன்னுரிமை அடிப்படையில் சாலைப் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும். பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.82 லட்சத்தில் தனி நபர் கழிப்பறை வசதியுடன் கூடிய வீடு
கட்டும் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திலும், பழங்கனாங்குடி கிராம மக்கள் தேர்வு செய்யப்படுவர். ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு உரிய திட்டமதிப்பீடு பெறப்படும். விரைவில் அனைத்து வசதிகளுடன் தன்னிறைவு பெறும் என்றார் ஆட்சியர்.
இந்த முகாமில்,  216 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மக்களவை உறுப்பினர் ப.குமார், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, வட்டாட்சியர் ஷோபா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com