காவிரிப்படுகையில் தரம்குறைந்த குழாய்கள் பதிப்பு: நீதி விசாரணை நடத்த பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

காவிரிப்படுகையில் தரம்குறைந்த குழாய்களை ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்துள்ளது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரிப்படுகையில் தரம்குறைந்த குழாய்களை ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்துள்ளது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை  மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜயராமன் உள்ளிட்டோரை சந்தித்தப் பிறகு அவர் செய்தியாளர்களிடம்  மேலும் கூறியது: கதிராமங்கலம் போராட்டம்  யாருடைய தூண்டுதலின் பேரிலும் நடைபெறவில்லை.  மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். பேராசிரியர் ஜயராமன் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பொய் வழக்குகளை காவல்துறையினர்  பதிவு செய்துள்ளனர். புதன்கிழமை (19-ம் தேதி) உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது அப்போது, நிச்சயம்  அவருக்கு விடுதலை கிடைக்கும்.
கதிராமங்கலத்தில் போலீஸாரை வெளியேற்றாவிட்டால்  மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். காவிரி படுகையில்  அனைத்து கிராமங்களிலும்  ஓ.என்.ஜி.சி  நிறுவனம், தரம்குறைந்த குழாய்களை பதித்துள்ளனர்.  இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புக்கொள்ளாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, அது தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com