திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு கலாம் நினைவு ஜோதி ஓட்டம்

மறைந்த குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி திருச்சி இளைஞர்களின் ஜோதி ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

மறைந்த குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி திருச்சி இளைஞர்களின் ஜோதி ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
டாக்டர் அப்துல்கலாம் பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட ஜோதி ஓட்டம்  திருச்சி மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியிலிருந்து தொடங்கியது. இந்த ஓட்டத்தை  சுப்பிரமணியன், மாமுண்டி ஆகியோர் தொடக்கி வைத்தார்.
வினோ பிரகாஷ், திலிப்குமார், ராஜ்குமார், அருள்தாஸ், சுடலைக்கனி, நியூட்டன், சுஜெய், வடிவேலன் ஆகிய 7 இளைஞர்கள்  இந்த ஜோதியைக் கொண்டு செல்கின்றனர்.
முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும் ஜோதி ஓட்டம் ஜூலை 21 ஆம் தேதி ராமேசுவரம் அருகில் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் நினைவிடத்தில் நிறைவடைகிறது.
அங்கு ஜோதியை கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் பெற்றுக் கொண்டு பேசுகிறார்.  இந்த ஜோதி ஓட்டம் செல்லும் பகுதியில் ஆங்காங்கே இளைஞர்களும் பங்கேற்று உடன் ஓடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com