உறையூர், திருப்பராய்த்துறை கோயில்களில் தேரோட்டம்

திருச்சி உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேசுவர சுவாமி மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில்களில் வைகாசித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேசுவர சுவாமி மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில்களில் வைகாசித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பஞ்சவர்ணேசுவர சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா மே 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகாசித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, திருத்தேரில் அருள்மிகு பஞ்சவர்ணேசுவர சுவாமியும், காந்திமதியம்மனும் எழுந்தருளினர். காலை 10.30 மணிக்குத் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த திருத்தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பராய்த்துறையில்: திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 29 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக,பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை அருள்மிகு தாருகாவனேசுவரர் தேரில் எழுந்தருளினர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு திருப்பராய்த்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் அனந்தகுமார்ராவ்,
தக்கார் ராமமூர்த்தி, ராமகிருஷ்ண தபோவனத்தினர், விழாக் குழுத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com