அரசியல் தலைவர்களுக்கு இறைச்சி அனுப்ப முயற்சி: 10 பேர் கைது

அரசியல் தலைவர்களுக்கு இறைச்சிகளை அனுப்ப முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரசியல் தலைவர்களுக்கு இறைச்சிகளை அனுப்ப முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து திமுக, திக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்து முன்னணி இறங்கியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பினர் கூறுகையில், மத்திய அரசு மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என அறிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மாட்டிறைச்சி உண்ண தடைவிதித்திருப்பதாக தவறான தகவல்களை பரப்பி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு எதிரான போராட்டத்தை இந்து முன்னணி மேற்கொண்டுள்ளது என்றனர்.
அந்த வகையில் திருச்சியில் புதன்கிழமை காலை, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திக தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிóடோருக்கு பாம்பு, தவளை, எலி இறைச்சிகளை அஞ்சல் மூலம் பார்சலில் அனுப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சுமார் 10 பேர் தலைமை அஞ்சலகத்தில் பார்சல் பிரிவு அலுவலகத்துக்குள் தவளை, பாம்பு இறைச்சி பொட்டலங்களுடன் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com