2018-க்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் பேச்சு

திருச்சி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.

திருச்சி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.
தேசிய குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி, சத்திரம்பேருந்து நிலையப் பகுதியில் விழிப்புணர்வு பேரணியை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் பேசியது: உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பது அடிப்படை உரிமையாகும். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசு அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து திருச்சி மாவட்டத்தில் மார்ச் 2018-க்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
பேரணியில், குழந்தை தொழிலாளர் பள்ளிக் குழந்தைகள் பள்ளி மாணவம, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, அரசு மற்றும் தனியார் வாகனங்களில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
  அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் அருமைக்கண்ணு, தொழிலாளர் ஆய்வாளர் சுதா,  துணை இயக்குநர்(தொழிலக பாதுகாப்பு) மாலதி, மாநகராட்சி நகர் நல அலுவலர் அல்லிராணி, குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் எஸ்.பியர்லின், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தைத் தொழிலாளர் திட்டம்: திருச்சி மாவட்டத்தில் 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.சி.எல்.பி. சியர்ஸ் திட்டத்தின் மூலம் கடந்த 22 ஆண்டுகளில் 10,001 மாணவ, மாணவியர் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, முறையாக பள்ளியில் சேர்க்கப்பட்டு உயர் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 2016-2017-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் 710 குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து மீட்டு அவர்கள் 24 சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். அதே ஆண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்கள், ஆட்சியரால் வழங்கப்பட்டது.
மாநகராட்சியில்..: அதேபோல திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஆணையர் ரவிச்சந்திரனா தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்புதின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் நாகேஷ், செயற்பொறியாளர் அமுதவல்லி உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com