அகில இந்திய விவசாயத் தலைவர்கள் கூட்டம்: அய்யாக்கண்ணு தலைமையில்விவசாயிகள் புதுதில்லி பயணம்

புதுதில்லியில் ஜூன் 16 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய விவசாயத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தேசிய

புதுதில்லியில் ஜூன் 16 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய விவசாயத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புதன்கிழமை புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்கும் வரை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். தனிநபர் பயிர்க் காப்பீடு கொண்டு வர வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் போராட்டங்களை அகில இந்திய விவசாய சங்ங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக அய்யாக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் தில்லியில்
ஜூன் 16 ஆம் தேதி காந்தி அமைதி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் புதன்கிழமை திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து செல்லும் இவர்கள் வெள்ளிக்கிழமை தில்லியைச் சென்றடைவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com