திருச்சியில் புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (ஃபபாஸி), திருச்சி லேண்ட் மார்க் எக்ஸ்போ ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (ஃபபாஸி), திருச்சி லேண்ட் மார்க் எக்ஸ்போ ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா திருச்சியில் ஜூன் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதுகுறித்து லேண்ட் மார்க் எக்ஸ்போ நிர்வாகிகள் என்.ரவிசங்கர், என். தர்மராஜ், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜி. சிவகுருநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: எங்களது நிறுவனம், ஃபபாஸி-யுடன் இணைந்து திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் ஜூன் 17 முதல் 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி தொடங்கி வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் சூழலியாளர் கோவை சதாசிவத்தின் 10 நூல்களை அறிமுகம் செய்கிறார்.
புத்தகத் திருவிழாவில் பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் 60 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் பிரத்யேகமாக பிரெய்லி புத்தக அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. புத்தகத் திருவிழாவில் புத்தககங்கள் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
விழாவில், நாள்தோறும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளும், தினமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசும் வழங்கப்பட உள்ளது.
 இதில் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com