தொடங்கியது புத்தகத் திருவிழா: ஜூன் 26 வரை நடைபெறுகிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (ஃபபாஸி), திருச்சி லேண்ட் மார்க் எக்ஸ்போவுடன் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் சனிக்கிழமை தொடங்கியத

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (ஃபபாஸி), திருச்சி லேண்ட் மார்க் எக்ஸ்போவுடன் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
ஜூன் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்களுக்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், வைகறை பதிப்பகம், கிழக்குப் பதிப்பகம், தமிழ்ச்சோலை பதிப்பகம், பாரதி பதிப்பகம், குமரன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், தமிழ்தேசம், காலச்சுவடு, சந்தியா பப்ளிகேஷன், கீழை புத்தகம், சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், நாதம் கீதம், ஆனந்த விகடன், சிக்த் சென்ஸ் பப்ளிகேஷன், புக் வேர்ல்டு, ஹிக்கின்பாதம்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்கள், வெளியீட்டாளர்கள் 60 அரங்கங்களை அமைத்துள்ளனர்.
புத்தகத் திருவிழாவில், மதுரையைச் சேர்ந்த இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில், பிரெய்லி புத்தக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிரெய்லி கதை, கவிதை புத்தகங்கள், நாவல்கள், சங்ககால நூல்கள், பிரெய்லி முறையில் எழுத உதவும் அட்டை, எழுதுகோல் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், சூழலியலாளர் கோவை சதாசிவத்தின் 10 நூல்களை அறிமுகம் செய்து பேசினார்.
விழா நடைபெறும் 10 நாள்களும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com