சர்வதேச யோகா தினம்: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர்மாவட்டத்தில் வாழ்வியல்முறை பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரசு சித்த மருத்துவத்துறை சார்பில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், வாழ்வியல் முறை

சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரசு சித்த மருத்துவத்துறை சார்பில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், வாழ்வியல் முறை யோகா பயிற்சிகள் மற்றும் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 3-ஆவது சர்வதேச யோகா தினம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதனையொட்டி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 10 மையங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது.
அதனையொட்டி புதன்கிழமை காலை 9 மணிக்கு, வாழ்வியல் முறை கண்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து யோகா பயிற்சி முறைகள் கற்பிக்கப்படுகின்றன.
தொடர்ந்து கண்காட்சி, கருத்துரைகள் மூலம் விளக்கப்படவுள்ளன. எனவே இவற்றில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
திருச்சி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை மணப்பாறை மற்றும் பெரம்பலூர், அரசு மருத்துவமனை அரியலூர், குழுமணி, நவல்பட்டு, பஞ்சப்பட்டி, அம்மாபாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com