சிறப்பு குறு, சிறு தொழில் கடன் வாரம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) சார்பில் சிறப்பு குறு மற்றும் சிறு தொழில்களுக்கான தொழில்கடன் வாரம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) சார்பில் சிறப்பு குறு மற்றும் சிறு தொழில்களுக்கான தொழில்கடன் வாரம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தொழில் முதலீட்டுக் கழகம் பொதுக்காலக் கடன், குறு மற்றும் சிறுதொழில்களுக்கான தொழில்கடன் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), நடைமுறை மூலதனக்  கடன் திட்டம், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம், வாகனக்
கடன் திட்டம், போன்ற பல்வேறு வகையில் கடனுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது.
3 சதவீத வட்டி மானியத்துடன், குறு மற்றும் சிறு தொழில்களுக்கு இயந்திர விலையில் 25 சதவீத மானியம், தவணைக்காலம் 9 ஆண்டுகளாக நீட்டிப்பு போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
எனவே, குறு,சிறுத் தொழில்களைத்தொடங்குவோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் வகையில் தொழில் கடன் வாரம் ஜூலை 3 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருச்சியில் ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் விழாவில் டிக் துணைப் பொது மேலாளர் ஜி. சீனிவாசன் பங்கேற்று,சிறப்பு ஆலோசனைகளை வழங்க உள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com