3 ஆய்வாளர்கள் உள்பட 11 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுக்கத் தவறியதாக 3 காவல் ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 11 போலீஸார் ஆயுதப்படைக்கு சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுக்கத் தவறியதாக 3 காவல் ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 11 போலீஸார் ஆயுதப்படைக்கு சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகரின் பல பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக மாநகர காவல் ஆணையர் ஏ. அருண், மாநகரில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகரில் கள்ளத்தனமாகவும், செல்லிடப்பேசி, லேப்டாப் மூலமும் லாட்டரி விற்பனை செய்த 12 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் லாட்டரி விற்பனையைத் தடுக்க தவறியதாக, காவல் ஆய்வாளர்கள் கண்டோன்மெண்ட் (சட்டம்-  ஒழுங்கு) பால்ராஜ், காந்திமார்க்கெட் (சட்டம்-  ஒழுங்கு) சிவக்குமார்,
மாநகரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோசலைராமன், கோட்டை காவல் உதவி ஆய்வாளர் சண்முகப்பிரியா, எடமலைப்பட்டிபுதூர் காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், அரியமங்கலம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி, ஆகிய 11 போலீஸாரையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் சனிக்கிழமை அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com