அனுமதியின்றி பதுக்கிய ரூ. 7 லட்சம் பட்டாசு பறிமுதல்: ஜவுளிக்கடை உரிமையாளரிடம் விசாரணை

திருச்சியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட ரூ. 7 லட்சம் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை போலீஸார் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி

திருச்சியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட ரூ. 7 லட்சம் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை போலீஸார் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஜவுளிக்கடையில் உறையூர் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மூடப்பட்ட ஜவுளிக்கடையின் உள் பகுதியில் சிலர் அமர்ந்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக முத்துக்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஜவுளிக்கடையில் மேற்கொண்ட சோதனையில், ஏராளமான பட்டாசு வகைகள் மற்றும் நாட்டு வெடிகள், வெடிமருந்துகள் பதுக்கியிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து , ஜவுளிகடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு வகைகள் கடந்தாண்டு தீபாவளிக்கு விற்பனை செய்ய வாங்கிவந்தது எனவும், அவை விற்பனையாகாமல் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 7 லட்சம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தீபாவளி விற்பனைக்கு வழங்கப்படும் பட்டாசு உரிமம் 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர நாட்டு வெடிகளும் விதிகளுக்கு புறம்பாக தயாரிக்கப்பட்டு பதுக்கியிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com