எரகுடியில் விநாயகர், மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

துறையூர் அருகே உள்ள எரகுடியில் உள்ள முதல்சந்தி விநாயகர், மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

எரகுடி மகாமாரியம்மன் கோயில் கருவறைக்கு முன்பாக முகப்பு மண்டபம் மற்றும் விமானத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டும், விநாயகர், செல்லாண்டியம்மனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டது.
இதற்கான குடமுழுக்கு விழா ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது.
திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் விநாயகர், செல்லாண்டியம்மன் மகா மாரியம்மன் சன்னதி விமானம் மற்றும் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. துறையூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராணி தேவி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com