ரமலான்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடை அணிந்து

ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ரமலான் நோன்பு மே 27 ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நோன்பிருந்து இஸ்லாமியர்கள் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சிறப்புத் தொழுகை நடத்தினர். ரமலான் பிறை ஞாயிற்றுக்கிழமை தெரிந்ததையடுத்து, ஜூன் 26 ஆம் தேதி ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு காஜி அறிவித்திருந்தார்.
கொண்டாட்டம் : ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதைத்தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமா அத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு 'முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரக்கடை அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமத்துல்லாஹ் பிர்தௌஸி சிறப்புரையாற்றினார். இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சபியுல்லா ஹான், மாவட்டச் செயலர் அப்துர் ரஹீம் என்கிற பாபு, தமுமுக மாவட்டச் செயலர் உதுமான் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி நத்தஹர்வலி தர்கா, மதுரை சாலை நூர் மஸ்ஜித், தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல், பாலக்கரை கான்மியா பள்ளிவாசல், நானா மூனா பள்ளிவாசல், ஆழ்வார்தோப்பு மதீனா பள்ளிவாசல், காந்தி மார்க்கெட் பேகம் சாஹிபா ளள்ளிவாசல், பெரியக்கடைவீதி சௌக் பள்ளிவாசல், தெப்பக்குளம் ஹஸன்பாக் பள்ளிவாசல், பீமநகர் துருப்பு பள்ளிவாசல், காஜாமலை பெரிய பள்ளிவாசல், கண்டோன்மென்ட் ஈத்கா மைதானம், கோட்டை ரயில் நிலையச் சாலை மக்கா பள்ளி என்கிற உமர் ஹத்தாப் பள்ளிவாசல் உள்ளிட்ட மாநகரின் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல், புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் ரமலான் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கு தனி இடம்: ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பெண்கள் தொழுகை நடத்துவதற்கு தனி இடம் பல்வேறு இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com