ஜிஎஸ்டியால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்

ஜிஎஸ்டி மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும்.  மிகச் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றார்  மத்திய சரக்கு மற்றும் சேவை வரி  (திருச்சி) ஆணையர் ஜெ.எம். கென்னடி.

ஜிஎஸ்டி மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும்.  மிகச் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றார்  மத்திய சரக்கு மற்றும் சேவை வரி  (திருச்சி) ஆணையர் ஜெ.எம். கென்னடி.
டிரஸ்ட்டு டேக்ஸ் கன்சல்டன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், திருச்சி, புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தினமணி நாளிதழ்ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நடத்திய சரக்கு மற்றும் சேவை வரி கருத்தரங்கில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:  சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகஇருக்கும்.   இதுவரை இருந்த மூன்று வரிகள் இருந்த  நாட்டில் இனி ஒரே ஒரு வரி மட்டும்தான் இருக்கப் போகிறது. வணிகர்கள் படும் கஷ்டம் இனி இருக்காது. வணிகம் எளிமையாக்கப்படும்.
மேலும், இணையவழி பில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ரூ.50,000-த்துக்கு மேல் பொருள்களை லாரிகளில் அனுப்பும் போது சோதனைச்சாவடிகளில் வெகுநேரம் காத்திருக்கத் தேவையில்லை.  இணையவழி ரசீதை காண்பித்தால் உடனடியாக செல்லலாம்.  இந்த சட்டத்தின் நோக்கமே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் பொருள்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான்.
கணினித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் 100 சதவீதம் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டிய வாய்ப்பு வியாபாரிகளுக்கு இல்லை.  வியாபாரிகள், வணிகர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை ஜிஎஸ்டி கவுன்சிலுக்குத் தெரிவிக்கப்படுகிறது. குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே வியாபாரிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
இதுவரை 160 நாடுகளில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பல்வேறு வசதிகளுடன் இந்த சட்டம் அமலாக உள்ளது. இந்தசட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன்,  மிக சிறப்பான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றார் கென்னடி.
கருத்தரங்கில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொருளாளர் வீ.கோவிந்தராஜுலு பேசியது:
இந்த சட்டத்தை பற்றி வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை. அதிகாரிகள் நமக்கு துணை இருப்பார்கள். நம் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.
கோவை பட்டயக் கணக்காளர் எஸ்.சந்திரசேகர், டிரஸ்ட்டு டேக்ஸ் கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே. அண்ணாமலை,  திருச்சி, புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்  பி.எல்.பசுபதி உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com