வாளாடியில் விவசாயிகள் ரயில் மறியல்: 59 பேர் கைது

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், வாளாடியில் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட 59 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், வாளாடியில் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட 59 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன் வடிவைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். மேகேதாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும், கூட்டுறவு மற்றும் அரசுடைமை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், தரிசாக விடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 15 ஆயிரமும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை கடலூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயிலை தமிழக உழவர் முன்னனி, காவிரி உரிமை மீட்புக்குழு, தமிழ் தேசிய பேரியக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் 59 பேர் மறித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் செட்ரிக் மேனுவல், காவல் ஆய்வாளர்கள் தினேஷ்குமார் (லால்குடி), பாலசந்தர் (சிறுகனூர்) உள்ளிட்ட போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் மாலையில்
விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com