அண்ணாஅறிவியல் மையத்தில் ரோபோ ஒலிம்பியாட் போட்டி தேர்வு வகுப்புகள்

திருச்சி அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் உலக ரோபோ ஒலிம்பியாட் போட்டிக்காக மாணவர்களைத் தேர்வு செய்யும் வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

திருச்சி அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் உலக ரோபோ ஒலிம்பியாட் போட்டிக்காக மாணவர்களைத் தேர்வு செய்யும் வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.
உலக அளவில் நடைபெறும் ரோபோ ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க பள்ளிகளிலும், அறிவியல் மையங்களிலும் மாணவர்களைத் தேர்வு செய்யும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இதில் தொடக்க நிலை வகுப்புகள் (7,8,9) ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
ரோபோ இயந்திரக் கருவிகளைத் தனித்தனியாக பிரித்து அவற்றை ஒன்றாக பொருத்தி காண்பித்தல், மடிக்கணினி மூலம் ரோபோ செயல்பாட்டை மேற்கொள்ளுதல், பணிகளை மேற்கொள்ள அவற்றுக்கு நேரம் நிர்ணயித்து கட்டளையிடுதல் போன்றவை குறித்து காலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாலையில் செய்முறையாக மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
ரோபோடிக்ஸ்- டெக்மேக்ஸ் நிறுவனத்தின் சுதர்சன் பயிற்சிகளை அளித்தார். இப்பயிற்சி வியாழக்கிழமையும் தொடரும். இப்பயிற்சியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அண்ணாஅறிவியல் மையத்தில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சியளிக்கப்படும்.
மண்டல அளவில் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவில் பங்கேற்பர். அதில் தேர்வு செய்யப்படுவோர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர் என்றார் அறிவியல் மையத் திட்ட இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்க்கோவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com