மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய சமூக நீதி, அதிகாரமளிப்புத் துறையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் ஒரே மாதிரியான அடையாள அட்டையை பெற  இணையதளங்களில் தன் விவரத்தை பதிவு செய்தல் வேண்டும்.
எனவே மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, சாதிச் சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை,மாற்றுத் திறனாளிகளின் புகைப்படம், ரத்த வகை போன்ற ஆவணங்களுடன் தங்கள் குடியிருப்பின் அருகாமையில் உள்ள கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அசல் சான்றுகளுடன் அருகாமையிலுள்ள கூட்டுறவுத் துறை மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையத்தை பயன்படுத்தி விவரங்களைப் பதிவு செய்து பயன் பெறலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com