செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை

ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில்,  செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க

ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில்,  செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என மத்திய-மாநில அரசுகளுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் மூளை, நரம்பியல்துறை நிபுணருமான எம்.ஏ. அலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
திருச்சி அல்லது மதுரையில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என்ற நிலையில் திருச்சி அருகேயுள்ள செங்கிப்பட்டி மருத்துவமனை அமைக்க சிறந்த இடமாக இருக்கும்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 மாவட்டப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.
மதுரையில் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஏராளமான கார்ப்பரேட் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
அவற்றின் மூலம் மதுரை மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தோருக்கு உயர்தர சிகிச்சை கிடைத்து வருகிறது.
ஆனால், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்தர சிகிச்சைக்கு திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையிலும்,
மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிக்கு வெகு அருகாமையில் செங்கிப்பட்டி இருப்பதால்
மாநிலத்தைச் சேர்ந்த பிற மாவட்டத்தினரும் பயன் பெறும் வகையிலும் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சிறப்பாக அமையும். எனவே, மத்திய மாநில அரசுகள் செங்கிப்பட்டி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com