மணல் திருட்டு:12 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முசிறி தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட காட்டுப்புத்தூர் அடுத்த சின்னப்பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (60) பாலசுப்பிரமணியன் (42) விஜயக்குமார் (36) ஹரிகிருஷ்ணன் (48) மணி (37) சதீஸ்வரன் (26) கோபாலகிருஷ்ணன் (37) மற்றும் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (28) ஆகியோரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், 10 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
லால்குடி: தாளக்குடி மற்றும் டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வருவதாக கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவஇடத்துக்குச் சென்று பார்த்த போது மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு வந்த பிச்சாண்டார்கோயில் கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பு (26), டோல்கேட் வாழவந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் தன்ராஜ் (28) இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை: துவரங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,விராலிமலையிலிருந்து மதுரை நோக்கி சென்ற லாரியில் அனுமதியின்றி மணல் கொண்டுச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை நிறுத்தி அதிலிருந்த ஓட்டுநர் ராமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32), விராலிமலையைச் சேர்ந்த சேகர் (47) ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் சனிக்கிழமை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com