ஸ்ரீரங்கம் கோயில்வெளிநாட்டினர் வருகை அதிகரிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டதற்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கோயிலின் அழகை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை ஸ்வீடன், கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் வந்தனர். அவர்கள் கோயிலில் உள்ள சிற்பங்களை கண்டு வியந்தனர். மேலும், சிற்பங்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, சேஷராய மண்டபத்தில் உள்ள குதிரைவீரனின் போர்சிலையை கண்டு வியந்து சிற்பங்களை ஒவ்வொன்றாக புகைப்படம் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com