திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மூட்டு வலிக்கான சிறப்பு முகாம்: மற்ற இடங்களில் அக்.17-ல் முகாம்

திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமையும், பிற மருத்துவமனைகளில் அக். 17-ஆம் தேதியும் 

திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமையும், பிற மருத்துவமனைகளில் அக். 17-ஆம் தேதியும்  நடைபெறவுள்ளது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமாராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி தேசிய ஆயுர்வேத தினம் இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவம் என்பது பஞ்ச பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்) அடிப்படையில் வாதம், பித்தம், கபம் போன்ற மூக்குற்றங்களின் அடிப்படையில் நோய்களை கணித்து மருந்துகள் வழங்கும் இந்திய மருத்துவ முறையாகும்.
ஒருங்கிணைந்த திருச்சி,  கரூர்,  பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தலைமை மருத்துவமனைகளிலும், திருச்சியில் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும்  காட்டூர், அன்பில், ஒரத்தூர், அழுந்தலைப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூர் மாவட்டம் சேங்கல், பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுர்வேத மருத்துவப் பிரிவுகளும் இயங்கி வருகிறது.
இவற்றில் அக். 17-இல் மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 8 முதல் பகல் 12 வரையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 முதல் பகல் 1 மணி வரையிலும் நடைபெறுகின்றது.
திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று:
திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இ.எஸ்.ஐ  மருத்துவமனையில் இச்சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக். 12)  காலை 8.00 முதல் பகல்  1.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஆங்கில மருந்துகள் பயன்படுத்தி வருவோரும் தயக்கமின்றி இந்த முகாமில் பங்கேற்று ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் குறித்த பயம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com