திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறைகேடு: 9 பேர் மீது வழக்கு

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஸ்ரீரங்கத்தில் ரூ. 1,03,160, திருச்சி கிழக்கு அலுவலகத்தில் ரூ. 43,000 என கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து  ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் ஆர். யோகராஜ் (மண்ணச்சநல்லூர்),  டி. மருதப்பா (ராம்ஜிநகர்), ஸ்ரீரங்கம் வட்டார அலுவலகத்தில் எல்காட் கணினி பிரிவு பணியாளர் ஜென்சிராணி மற்றும் தனியார் பேருந்து நிறுவனப் பணியாளர்கள் எஸ். குணசேகரன், ஜெ. ஜெயக்குமார், பி. இளஞ்செழியன், எம். அமிருதீன், எஸ். மகேஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com