சமயபுரம் கோயில் தேரோட்டம்:  இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி திங்கள்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி திங்கள்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமயபுரம் கோயில் தேரோட்டத்தையொட்டி திங்கள்கிழமை  (ஏப்.16) பிற்பகல் 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.   
திருச்சியிலிருந்து சேலம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள், புறநகர்ப் பேருந்துகள்  குடமுருட்டி காவல் சோதனைச்சாவடி, ஜீயபுரம், பேட்டைவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாகச் செல்ல வேண்டும்.
இதுபோல சேலத்திலிருந்து வரும் புறநகர்ப் பேருந்துகள், கனரக வாகனங்கள்  நாமக்கல், முசிறி ,கைகாட்டி, குளித்தலை, பேட்டைவாய்த்தலை, ஜீயபுரம் வழியாக திருச்சி வர வேண்டும்.
திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து (தேசிய நெடுஞ்சாலை எண் 45)  திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து புறநகர்ப் பேருந்துகள், கனரக வாகனங்கள் மணப்பாறை, ஆண்டவர்கோயில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார்பாலம், துறையூர், பெரம்பலூர் வழியாக திருச்சி- தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சென்னை செல்ல வேண்டும்.
மதுரை மார்க்கத்திலிருந்து  (தேசிய நெடுஞ்சாலை 45 பி) திருச்சி வழியாகச் சென்னை செல்லும் கனரக வாகனங்கள், புறநகர்ப் பேருந்துகள்  லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர்கோயில் சோதனைச்சாவடி,  குளித்தலை, முசிறி, பெரியார்பாலம், துறையூர், பெரம்பலூர் வழியாக திருச்சி- தேசிய நெடுஞ்சாலையை  அடைந்து சென்னை செல்ல வேண்டும்.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள்  கொள்ளிடம் ஒய்-சாலை சந்திப்பு,  கொள்ளிடம் ரவுண்டானா,  நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை,  திருப்பட்டூர் பிரிவுச் சாலை, சிறுகனூர் சந்திப்பு வழியாக சென்னை டிரங்க் சாலையை அடைந்து செல்லலாம்.
சென்னையிலிருந்து திருச்சி வரும் அனைத்து கனரக வாகனங்கள்  பெரம்பலூரிலிருந்து திருப்பப்பட்டு அரியலூர், புள்ளம்பாடி,  லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதிய பாலம் வழியாக  திருச்சிக்குள் வந்து செல்ல வேண்டும்.
சென்னை சாலை வழியாக  வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டு குமுளூர், பூவாளூர் சந்திப்பு, லால்குடி கொள்ளிடம் டோல்கேட், கொள்ளிடம் புதிய பாலம் வழியாக திருச்சிக்குள் வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com