துறையூரில் தேன்கூடு அழிப்பு
By DIN | Published on : 17th April 2018 08:57 AM | அ+அ அ- |
துறையூர் சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் ச. நடராஜன் (65). இவருடைய முதல் மாடி விளிம்பில் பெரிய தேன் கூடு இருந்தது. கடந்த வாரம் அந்த வழியே சென்ற சிலரை தேனீக்கள் கடித்ததால் தேன் கூட்டை அழிக்குமாறு துறையூர் தீயணைப்புத் துறையிடம் அப்பகுதியினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர். நாகராஜன் தலைமையிலானோர் திங்கள்கிழை இரவு தீ வைத்து தேன் கூட்டை அழித்தனர்.