திருச்சி ஜங்சனில் ரயில் மறியல்: 40 பேர் கைது 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்சனில் ரயில் மறியலில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்சனில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் 40 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாது அமைக்க வேண்டும்,   மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,  எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நீக்கக் கோரி மத்திய அரசு  மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் மறுமலர்ச்சிக் கழக நிறுவனர்-தலைவர் வழக்குரைஞர் பொன். முருகேசன் தலைமையில் கட்சியினர் ரயில் மறியல் செய்ய ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  எனினும்,  ரயில் நிலையத்துக்குள் முன்பே சென்ற 12 பேரில் 5 பேர் ஜனசதாப்தி ரயிலை மறித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து ரயில் நிலையத்துக்குள் இருந்த 12 பேர் உள்பட மொத்தம் 40 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  போராட்டத்தில் மாவட்டச் செயலர்கள் கரூர்  மு.க.விஜி, பெரம்பலூர்அழகிரி, திருச்சி  நந்தா, திருச்சி புறகர் மாவட்டத் தலைவர் சுதாகர், கரூர் மாவட்ட இளைஞரணிச் செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com