"செறிவும், செழுமையும் நிறைந்தவை சங்க இலக்கியப் பாடல்கள்'

சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் நிறைய உள்ளன என்றார் முனைவர் கு. திருமாறன்.

சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் நிறைய உள்ளன என்றார் முனைவர் கு. திருமாறன்.
திருச்சிராப்பள்ளி பாவாணர் தமிழியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திங்கள் பொழிவு மற்றும்  வேங்கூர்ப் புலவர் க. முருகேசன் எழுதிய இரு நூல்கள் அறிமுக விழாவில், உதிரிப்பூக்கள் என்ற நூலை அறிமுகம் செய்து, அவர் மேலும் பேசியது:
சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் அதிகம் உள்ளன.  அதுபோல, பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் வேகமும், வீச்சும் கொண்ட சில பாடல்கள் உள்ளன.  சில பாடல்களில் செய்யுள் வளம்  குறைவாக இருந்தாலும்  உணர்ச்சியும், வீச்சும் குறையவில்லை. பலவகை பாக்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மரபுக்கவிதை குறித்து எடுத்துரைக்கப்பட்டாலும் புதுக்கவிதைகளும் இந்த நூலில் உள்ளன. இன்றைய காலத்துக்கேற்றதாக இந்த நூல் அமைந்திருக்கிறது என்றார் திருமாறன்.
தமிழே திராவிடம், திராவிடமே தமிழ் என்ற நூலை அறிமுகம் செய்து பேராசிரியர் இ. சூசை சிறப்புரையாற்றினார். பொறியாளர் வி. விடுதலை வேந்தன் வாழ்த்தினார். விழாவில், இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம், திருக்குறள் சு. முருகானந்தம், கலியபெருமாள், பொறியாளர் சுப்பிரமணியன், பாவாணர் தமிழியக்கத்தின் தமிழகன், மருத்துவர் கோபால்,  சமூக சிந்தனை உயிர்ப்பியக்க அமைப்பாளர் ம. செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில்  கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com