அட்மா பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் அட்மா பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் அட்மா பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
சம்பா அறுவடை தொடங்கிய பிறகு விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் வகையில், வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் சார்பில் பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் தை மாதத்துக்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகளும் தொடங்கியுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், உப்பிலியாபுரம், தாத்தையங்கார்ப்பேட்டை, திருவெறும்பூர், துறையூர், தொட்டியம், புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, முசிறி, லால்குடி, வையம்பட்டி ஆகிய 14 வட்டங்களிலும் முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களது வயலில் நேரடியாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா 25 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு 6 வகுப்புகளாக இந்த பயிற்சி நடைபெறும்.
இதன்படி, முசிறி வட்டாரத்தில் சனிக்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பை வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.எம். உதுமான் முகைதீன் தொடக்கி வைத்தார். துறையூர் வட்டாரம், புள்ளம்பாடியில் துணை இயக்குநர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். உழவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து துணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன் விளக்கிக் கூறினார். இதேபோல, 14 வட்டாரங்களிலும் பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில், 350 விவசாயிகள் பங்கேற்றுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப்பகுதி வட்டார வேளாண்மைத்துறையினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com