குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கு.ராசாமணி ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கு.ராசாமணி ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாநகரக் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதில்,ஆட்சியர் கு.ராசாமணி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதிகளை மாநகரக் காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுதந்திர போராட்ட தியாகிகள்ஆகியோருக்கு கட்டணமில்லாமல் போக்குவரத்து வசதி, தேவையான உணவு வசதி, இருக்கை வசதி ஆகியவற்றை வருவாய்த்துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம்,கல்வித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மூலம் வாகனம் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். விழா ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 108 அவசர ஊர்தி வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல் துறை சார்பில், விழா நடைபெறும் மைதானத்தில் தகுந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com