திருச்சியில் தரையிறங்கிய ஆஸ்திரேலிய விமானம்

பாரீஸ் செயின்டேனியா நகரிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டுக்குச் சொந்தமான ஏர்-ஆஸ்ட்ரல் விமானம் சனிக்கிழமை அதிகாலை பாங்காங்

பாரீஸ் செயின்டேனியா நகரிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டுக்குச் சொந்தமான ஏர்-ஆஸ்ட்ரல் விமானம் சனிக்கிழமை அதிகாலை பாங்காங் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சென்னை விமான நிலையப் பகுதியைக் கடந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது வானிலை மோசமாகக் காணப்பட்டது. இதையடுத்து விமானம் சென்னைக்குத் திருப்பப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமானம் உடனடியாக தரையிறக்க முடியாத காரணத்தால் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு 105 பயணிகளுடன் பத்திரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் ஆஸ்ட்ரல் விமானம், வானிலை சரியானதைத் தொடர்ந்து முற்பகல் 11.05 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
திருச்சி வந்த விமானங்களும் தாமதம்: இதேபோல், திருச்சியில் நிலவிய மோசமான வானிலைக் காரணமாக மலேசியாவிலிருந்து வந்த ஏர்ஏசியா, மலிண்டோ சிங்கப்பூரிலிருந்து வந்த டைகர் ஏர்வேஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் தாமதமாக தரையிறங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com