மதுக்கடைகளை 3 நாள்களுக்கு மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாள்கள் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாள்கள் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜனவரி 15ஆம் தேதி (திங்கள்கிழமை) திருவள்ளுவர் தினம், ஜன.26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம், ஜன. 31ஆம் தேதி (புதன்கிழமை) வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாள்களுக்கும் அரசு உலர் நாளாக அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உரிமம் பெற்ற பார்கள் ஆகியவற்றில் மதுபானம் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாட்களிலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் கட்டாயம் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மதுவிற்பனை செய்தாலோ தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com