சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.  திருச்சி மத்திய சிறையில் ஆய்வு

திருச்சி மத்திய சிறைச்சாலையில், தமிழக சிறைத்துறை ஏடிஜிபி  அசுதோஷ் சுக்லா வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில், தமிழக சிறைத்துறை ஏடிஜிபி  அசுதோஷ் சுக்லா வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தார்.
 தமிழக சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, மதுரையிலிருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு திடீரென வந்தார். சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி,  சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், சிறைத்துறை அதிகாரிகள் ஏடிஜிபி-க்கு வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிறை வளாகத்தில் அவர் ஆய்வு செய்தார்.
  சமையற்கூடம், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள செல்கள், கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும் தொழில் மையம், முதலுதவி சிகிச்சை மையம்  உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளை அசுதோஷ் சுக்லா சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார்.
  அதன் பின்னர், சிறைக்காவலர்கள் பயிற்சி மையத்தையும், காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி குறித்தும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவம், தொழிற் பயிற்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஏடிஜிபி கேட்டறிந்தார்.
 சிறைகளுக்குள் செல்லிடப்பேசி மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஏடிஜிபி-க்கு சிறப்பு பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அவர் சிறை வளாகத்தில் காரை விட்டு வெளியே இறங்கவில்லை, காருடனே சிறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com