திருச்சியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சியில் சுமார் 180 பேர் பங்கேற்ற யோகா-விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சியில் சுமார் 180 பேர் பங்கேற்ற யோகா-விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக யோகா தினமான ஜூன் 21-ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்டத்தில் சுமார் 21,000 பேருக்கு  யோகா குறித்த விழிப்புணர்வையும், 1,500 பேருக்கு யோகா பயிற்சியும் அளிக்க ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை மையம், திட்டமிட்டுள்ளது.  அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற 8 முதல் 80 வயது வரை மேற்கொள்ள வேண்டிய 108 வகையான ஆசனப் பயிற்சிகளை  மேற்கொண்ட சாதனை நிகழ்வு, திருச்சியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 180 பேர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். 
அனைவருக்கும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியில்  திருச்சி மாவட்ட  நூலக அலுவலர் ஏ. சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.  யோகா ஒருங்கிணைப்பாளர்கள் தா. சந்தானகிருஷ்ணன், ஆர்.ஸ்ரீதர், மற்றும் யோகா பயிற்சியாளர்கள் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஆர். சுகுமார், எஸ்.சீனிவாசன், கே. ஜெயபிரகாஷ்நாராயணன் ஆர். அகில்ஷர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com