முசிறியில்  35 மி.மீ. மழை

திருச்சி மாவட்டம், முசிறியில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகரப் பகுதிகளிலும், புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.  சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் 
( மழையளவு மி.மீட்டரில்):
முசிறி - 35 மி.மீ,  மருங்காபுரி- 15.20,  நவலூர் குட்டப்பட்டு- 14.20, புள்ளம்பாடி- 9.60, தேவிமங்கலம்- 9, லால்குடி- 8.20, கல்லக்குடி- 7.20, புலிவலம்- 7, சமயபுரம்-6, வாய்த்தலை அணைக்கட்டு,  திருச்சி டவுன்- 5,  திருச்சி விமான நிலையம்- 3.80, திருச்சி ஜங்சன், கோவில்பட்டி- 3.20,  சிறுகுடி- 3,   பொன்மலை- 2.40,  தாத்தையங்கார்பேட்டை, நந்தியாற்றுத்தலைப்பு- 2 மி.மீ.  மாவட்டத்தில்  மொத்தமாக 141 மி. மீ. மழையும், சராசரியாக 5.64 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com