பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க இளையோர் அணி திரள வேண்டும்

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க இளைய சமுதாயம் அணி திரள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க இளைய சமுதாயம் அணி திரள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வலியுறுத்தினார்.
மகளிருக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தொடங்கிய இந்த பேரணியானது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு செல்லவுள்ளது. திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பேரணிக்கு சமூக நலத்துறை சார்பில் வரவேற்பு அளித்து மாநகரப்பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பிரசார பேரணியை தொடக்கி வைத்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது:
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துவதில் ஒவ்வொரு கல்லூரி மாணவர், மாணவியரும் முக்கிய பங்காற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாத வரையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாய், தந்தை, சகோதரர், சகோதரி என அனைவரும் இணைந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மகளிருக்கு எதிரான வன்முறைகளை தடுத்தும் பணியில் அதிகளவில் இளையோர் ஈடுபட வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் உஷா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி, ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com