நாளை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு சனிக்கிழமை முதல் ஊஞ்சல் திருவிழா (டோலோத்ஸவம்) தொடங்குகிறது. 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு சனிக்கிழமை முதல் ஊஞ்சல் திருவிழா (டோலோத்ஸவம்) தொடங்குகிறது. 
    கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை ஸ்ரீரங்கநாதருக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து வரும் சனிக்கிழமை (நவ.10) முதல் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஊஞ்சல் திருவிழா தொடங்க உள்ளது. வரும் 16 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழா நாட்களில் ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். முதல் நாளான சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்து சேருகிறார். 
அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழா ஆரம்பமாகிறது. இருபுறமும் வெண்சாமரம்  வீச மேளதாளத்திற்கு ஏற்ப ஊஞ்சலில் ஸ்ரீரங்கநாச்சியார் ஆடுகிறார். 
இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். விழா நாட்களில் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும். 8. 45 மணிக்கு மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் ஸ்ரீரங்கநாச்சியார்.  
ஊஞ்சல் உற்ஸவ விழாவையொட்டி மாலை 3 மணிமுதல்  5 மணி வரை மூலவர் சேவை கிடையாது.      விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com