பாஸ்போர்ட் முறைகேடு: ஒருவர் கைது

சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி, பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் சே. அப்பாஸ்அலி (39). மலேசியாவில்

சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி, பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் சே. அப்பாஸ்அலி (39). மலேசியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை விமானம் மூலம் திருச்சி வந்த அவரிடம், பயண ஆவணங்களை  குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அவர் தவறான தகவல்களை கொடுத்து, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சனிக்கிழமை அவரை கைது செய்தனர்.
தூக்கிட்டு மாணவி தற்கொலை: திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிசெல்வம் மகள் தர்ஷணி (17). இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததாகவும், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. எனவே தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
வழிப்பறி 3 பேர் கைது: தெலங்கானாவை சேர்ந்தவர்  எஸ். சாய்கார்த்திக் (20). திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் விடுதியில் தங்கி பி.டெக் படித்து வருகிறார். இவர் சனிக்கிழமை மாலை காந்திச்சந்தை  பகுதியில் பழங்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த 3 பேர் சாய் கார்த்திக்கை மிரட்டி அவரது பாக்கெட்டிலிருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசி மற்றும் ரொக்கம் ரூ. 3,000 ஆகியவற்றை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், காந்திச்சந்தை போலீஸார் வழக்குப் பதிந்து,  திருச்சி அழகானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மணிசங்கர் (19), கௌதம் (20), கிஷோர் (22) ஆகிய மூவரையும் கைது செய்து, செல்லிடப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மயங்கி விழுந்தவர் சாவு: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர், மா. சிவலிங்கம் (55). கடந்த ஆக் 17 ஆம் தேதி திருச்சி வந்த அவர், மாலை 5 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு இறங்கும் போது, மயங்கி விழுந்தார்.  இதனையடுத்து போலீஸார் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை இறந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com