மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

மகளிருக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டம்  திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகளிருக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டம்  திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாந்த மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, திருச்சி தடகள அமைப்பு மற்றும் ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் மொத்தம் 3 பிரிவாக நடத்தப்பட்டது.  இதில் 21 கி. மீ. தொலைவுக்கான போட்டி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது, ரோட்டரி மாவட்ட ஆளுநர்  போட்டியை தொடங்கி வைத்தார். 
 10 கி.மீ மற்றும் 5 கி. மீ. தொலைவுக்கான போட்டிகள் திருவானைக்கா மாம்பழச்சாலை பகுதியில் உள்ள ஜி.வி.என். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. 
தில்லைநகர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் பள்ளி வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றது. 
இரு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரைசா வில்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்று மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com