முறைகேடு புகார் எதிரொலி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர்  பணியிட மாற்றம்

திருச்சி விமான நிலையத்தில் அண்மையில்   நடந்த முறைகேடுகளை அடுத்து அங்கு பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் அண்மையில்   நடந்த முறைகேடுகளை அடுத்து அங்கு பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர், கடத்தல் பேர்வழிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு தங்கம், மின்னணு சாதனப் பொருட்கள், மது வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வர உதவுவதாகவும்,  அதே நேரம் பயணிகளிடம் சோதனை என்ற பெயரில் மிகவும் கெடுபிடி செய்வதாகவும்,  குறிப்பாக அயல்நாடுகளில்  பணியாற்றும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பும்போது குடும்பத்தினருக்காக கொண்டு வரும் பொருட்கள் குறித்து, அவர்கள் விரக்தியடையும் வகையில் விசாரணை நடத்தி, வரி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள்,  திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆக, 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீர் முகாமிட்டு சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கிடமான பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடத்தல் பேர்வழிகளுக்கு  சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட  6 பேர் உதவியது தெரியவந்தது. இதையடுத்து, சுங்கத்துறை  (திருச்சி விமான நிலைய) அதிகாரிகளான, உதவி ஆணையர் எம். வெங்கடேசலு,  கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, எஸ். ராமகிருஷ்ணன்,  ஆய்வாளர்கள் எஸ். அனீஸ்பாத்திமா, பிரஷாந்த் கெüதம், சுங்கத் துறை ஊழியர் ஃப்ரùட்டி எட்வர்டு ஆகிய 6 பேர் மற்றும் வியாபாரிகள் போர்வையில், கடத்தல் தொழிலில் ஈடுபட்ட பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து அனைவரையும் கைது செய்து மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது சம்பவத்தைத் தொடர்ந்து சுங்கத்துறையினர்  6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் பெரும்பாலானவர்களை பணியிடை மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கத் துறையில் மொத்தம் 34 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். தவிர விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவிலும் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை செப். 3 ஆம் தேதி திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் ஜெ. முகமது நவ்பால் வெளியிட்டார். பணி மாற்றம் செய்யப்பட்டோர் செப். 12}க்குள் பணியில் சேருமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். 
மாறுதல் உத்தரவுப்படி, திருச்சி விமான நிலைய, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர்களாக, நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங்,  நரேந்திரகுமார் (கார்கோ), ரவிகேஷ்குமார்கேசன் (கார்கோ) ஆகியோர் பொறுப்பேற்கவுள்ளனர். இதில் புகாரில் சிக்காத சில அதிகாரிகள் மட்டும் பணியிட மாறுதலில் இருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com