தீபாவளி பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பிக்க செப்.28 கடைசி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். புதிய தற்காலிக பட்டாசு கடைகளை சில்லறை வணிகத்தில் விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ, பட்டாசு கடைகளை புதுப்பிக்கவோ வெடிமருந்து சட்ட விதிகளின்படி உரிய அனுமதி பெற வேண்டும். எனவே, உரிய ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com