பாசன வாய்க்காலில் கிடந்த அமில பேரலால் கண் எரிச்சல் : மக்கள் பாதிப்பு: போலீஸார் விசாரணை

பாசன வாய்க்காலான அய்யன் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை கிடந்த அசிட்டோன் அமில டின் பேரலில் ஏற்பட்ட

பாசன வாய்க்காலான அய்யன் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை கிடந்த அசிட்டோன் அமில டின் பேரலில் ஏற்பட்ட கசிவினால் துர்நாற்றம், கண் எரிச்சல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இந்த மணல் குவாரிக்கு செல்லும் வழியில் அய்யன்வாயக்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்கிறது. இந்த வாய்க்காலின் கரையில்  ஊதா நிறத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் டின் கிடந்தது.
இந்த பேரலை சிறுவர்கள் சேதப்படுத்தியதால், அதிலிருந்த அமிலம் வெளியேறி துர்நாற்தம் வீசியது. இதனால் அப்பகுதி வழியாகச் சென்றவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பேரல் டின் வாய்க்காலில் தண்ணீரில் தள்ளி விடப்பட்டது. இது குறித்து வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமலர் ஆகியோர் வாத்தலை காவல் நிலையம், ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பரமணியன், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேரல் டின் குறித்த விவரங்களை ஆராய்ந்தனர். அப்போது தண்ணீரில் கிடந்த பேரல் அசிட்டோன் அமிலம் என்பதும், இது ஒரு கரிம வேதியியல் எனவும், எளிதில் தீப்பற்றக் கூடிய திரவம் எனவும், இதனை சுவாசித்தால் கண் எரிச்சல், தலைவலி, நுரையீரல் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த பேரலை தீயணைப்புத் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. 
இந்த பேரல் டின்னை யாரேனும் வீசிச் சென்றார்களா அல்லது வாகனங்களில் ஏற்றிச் சென்ற போது தவறி கீழே விழுந்தவையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com