தூய்மைப்பணியில்...ரயில்வே அருங்காட்சியகம், தலைமை அஞ்சல் நிலையம்

மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் திருச்சி ரயில்வே அருங்காட்சியகம், தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் திருச்சி ரயில்வே அருங்காட்சியகம், தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் இந்தியாவில் திறந்தநிலை கழிப்பிடங்களே இல்லை என்ற நிலையை எட்டும் வகையில், மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ரயில்நிலையம், அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. ரயில்வே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி தொடக்கி வைத்தார். இப்பணியில் ரயில்வே போலீஸார், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அருங்காட்சியக வளாகம் முழுவதும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
இதேபோல, திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உபமன்யூ தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அமிர்தா வித்யாலயம் மாணவர்கள்
திருச்சி, செப்.15: திருச்சி வாசன் நகர் விரிவாக்கப் பகுதிகளில் இரட்டைவாய்க்கால் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இப் பணியை பள்ளி முதல்வர் உஷா ராகவனும், துணை முதல்வர் விஜிமோன் அய்யப்பனும் தொடக்கி வைத்தனர். 30 ஆசிரியர்கள் மேற்பார்வையில் 7 பிரிவுகளாகப் பிரிந்து 300 மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வாசன் நகர் விரிவாக்கப் பகுதிகளில் இருந்த குப்பைகளை மாணவ, மாணவிகள் தனித்தனியே சேகரித்து அகற்றினர். மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் இப்பணியைப் பார்வையிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் வாசன் நகர் நலச்சங்கத்தினருக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com