"பள்ளி, கல்லூரி காலங்களை என்றும் மறக்க முடியாது'

பள்ளி, கல்லூரியில் படித்தபோது நடந்த பசுமையான நினைவுகளை என்றும் மறக்க முடியாது என்றார் திரைப்பட நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

பள்ளி, கல்லூரியில் படித்தபோது நடந்த பசுமையான நினைவுகளை என்றும் மறக்க முடியாது என்றார் திரைப்பட நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.
       திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, பெரியாரின் 140 ஆவது பிறந்த தின விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: 
     நமது பள்ளி மற்றும் கல்லூரி கால பசுமையான நினைவுகளை என்றும் மறக்க முடியாது. பள்ளி, கல்லூரி என்றாலே கலாட்டாக்கள் இருக்கும். நம்மைத் தொடர்ந்து நினைவு படுத்திக்கொண்டிருப்பது நமது கல்லூரி கால நினைவுகள்தான். கல்லூரி அமைக்க இடமும் கொடுத்து, கல்லூரியும் அமைத்து பல்லாயிரக்கணக்கானோர் கல்வி கற்க வழிவகுத்த பெரியாரையும், இந்தக் கல்வி நிறுவனத்தையும் யாரும் எளிதில் மறக்க முடியாது. கல்வி நிறுவனங்களை நினைப்பது போல் தங்களது ஆசிரியர்களையும் மறவாமல் மதிப்புடன் நடத்துவதும் அவசியம் என்றார்.
     கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் புரவலரும், திருச்சி மாநிலங்களவை உறுப்பினரும் திருச்சி சிவா பேசியது: 
    ஆண்டுக்கு ஒரு முறை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 
அனைவரும் ஆண்டுதோறும் தவறாமல் இந்நிகழ்வில் பங்கேற்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வழிவகுத்ததுடன், பல பேர் கல்வி கற்க அடித்தளமிட்டவர் பெரியார். அவரில்லை என்றால் பலருக்கு கல்வி எட்டாக்கனியாகி இருக்கும் என்றார்.
   முன்னதாக நடைபெற்ற பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற பேராசிரியர் லெ. செல்லப்பா தலைமை வகித்தார். பேராசிரியர்கள் மு.அ. முஸ்தபா கமால், எம், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். பொருளாளர் ப. கிருஷ்ணகோபால் நன்றி தெரிவித்தார். முன்னாள் மாணவ, மாணவியர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றுத் தங்களது பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com