விடைத்தாள் மதிப்பிடும் மையத்தில் ஜாக்டோ அமைப்பினர் போராட்டம் 

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் மையத்தில் ஜாக்டோ அமைப்பினர் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் மையத்தில் ஜாக்டோ அமைப்பினர் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில், திங்கள்கிழமை காலை திரண்ட ஜாக்டோ அமைப்பினர் கூட்டமைப்புத் தலைவர் லூர்து சேவியர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதிய உயர்வு 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பணி முரண்பாடுகளைக் களைய வேண்டும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்க அமைக்கப்பட்ட குழுவைக் கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு விடைத் தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com