கடலூரில் 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
உலக பூமி தினத்தை முன்னிட்டு, கடலூர் நகராட்சி, நம்ம கடலூர் இயக்கம், கடலூர் ஆக்ஸிஸ் வங்கி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து மைதானத்தில் மஞ்சைக்கொன்றை, மயில்கொன்னை, மகாக்கனி, கடம்பன், மந்தாரை உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த 60 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22-ஆம் தேதி உலக பூமி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடலூரில் முழுமையாக பசுமை போர்வை போர்த்த வேண்டும் என தொடர்ந்து முயன்று வருகிறேன்.
மரங்கள் நமக்கு நல்ல காற்றைக் கொடுக்கின்றன. அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரங்கள் வளர்க்க முன்வர வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மரக் கன்றுகளை நட்டால்தான் அவை மழைக் காலத்தில் நன்கு வளரும். எத்தனை மரக்கன்றுகளை நடுகிறோம் என்பது பெரிதல்ல. அவற்றை பாதுகாத்து வளர்ப்பதுதான் முக்கியம். ஆகவே, மரக்கன்றுகளை நட்டு நன்றாக பாதுகாத்து வளர்க்க வேண்டும். 2017-18-ஆம் ஆண்டுக்குள் 10,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் (பொ) ஜெ.உமாமகேஸ்வரி, கடலூர் பெருநகராட்சி ஆணையர் (பொ) பி.குமரகுருபரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், புதுச்சேரி ஆக்ஸிஸ் வங்கி கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com